ஸ்விக்கி ஜொமாட்டோவில் மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி துவங்கியது. ஆன்லைன் மூலம் ஆர்டர் டெலிவரி செய்யப்படும்.
மும்பை: இந்தியாவிலேயே கொரோனா நோய் பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து இருந்துவருகிறது. இந்த மாநில தலைநகர் மும்பையில் ஆன்லைனில் மது விற்பனை துவங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த வாரம் மது விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் மும்பையில் இன்று முதல் மதுபிரியர்கள் ஸ்விக்கி ஜொமாட்டோவில் மது பாட்டில்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
எனினும் நோய் தொற்று அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு (containment zones) மதுபாட்டில்களை ஹோம் டெலிவரி செய்வதற்கு அனுமதி இல்லை.
ஆன்லைன் விற்பனைக்கு மதுக்கடைகள் மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற மதுபான கடைகளிலிருந்து ஸ்விக்கி, ஜொமாட்டோ மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இதுவரை 25,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 882 பேர் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் இதுவரை 44,000 அதிகமானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.