Home நிகழ்வுகள் தமிழகம் டி.நகரை அதிர வைத்த தோனி; அடங்க மறு… திருப்பி அடி..

டி.நகரை அதிர வைத்த தோனி; அடங்க மறு… திருப்பி அடி..

565
0
டிநகர் ரங்கநாதன் தெரு

டி.நகர் ஸ்டேடியம், தோனி கிரிக்கெட் விளையாட வருவாரா? கொரோனா பிரிமியர் லீக்!

டிநகர் ரங்கநாதன் தெரு-வில் இளைஞர் படையால் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு உள்ளது. தோனியே வா.. என அழைப்பு விடுத்தது அதிரவைத்தனர் ரசிகர்கள்.

டிநகர் என்றால் ranganathan street saravana stores, absolute barbecue, coal barbeque, ags t nagar இப்படி தான் நாம் அதிகம் தேடிய இடங்கள் இருக்கும்.

டிநகர் ரங்கநாதன் தெரு

ஏய் லூசு பயலே உனக்கு என்ன மூளை கொழம்பி போச்சா என்று தானே கேட்கிறீர்கள். நிற்க கூட இடம் இல்லாத இடத்தில் எப்படி கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட முடியும்.

‘தி லெஜென்ட்ஸ்’ அண்ணாச்சி ஸ்டேடியம் கட்டத்தான் விட்டுவிடுவாரா என அவரின் தம்பிகள் கொந்தளிப்பதை கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

டி.நகர் வணிக தளமாக நிற்க கூட இடம் இல்லாமல், அண்ணாச்சி கண்ட்ரோலில் இருந்தது எல்லாம் போன மாசம். நான் சொல்லுறது இந்த மாசம்.

இப்போ ரங்கநாதன் பேட்டை டேக் ஓவர் செய்தது தோனியின் படை. கொரோனா பீதியில் சென்னை மக்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.

அண்ணாச்சி மட்டும் வெளியில் வருவாரா, வீடு முழுவதும் சானிடைசரை தெளித்துவிட்டு கும்புற படுத்து தூங்கிகொண்டு இருப்பார்.

மோடி உரை

பாரதப் பிரதமர் மோடி சீனாவை விட பெரிய சிலை என சர்தார் வல்லபாய் படேல் சிலை வைத்தார். நேற்று கொரோனா குறித்து உரையாற்றுவதாகச் சொன்னார்.

சரி சீனாவை முந்தும் வகையில் 5 நாளில் மருத்துவமனை ஒன்று கட்டுவோம் எனக் கூறுவார் என எதிர்பார்த்தால், பாக்கெட்டில் நயா பைசா இல்ல, தன்னார்வலர்களை வரவேற்கிறோம் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பீதியிலும் பீதி முரட்டு பீதி

மோடி இப்படி பேசிய பின்பு தான் நாட்டு மக்கள் மேலும் பீதி அடைந்து உள்ளனர். கொரோனா வேற ரூபத்தில் பரவி வருகிறது.

இருப்பினும் தோனியின் இளம் கன்றுகள் பயமறியாது என்பதை போல, சென்னை முழுவதையும் கண்ட்ரோலில் எடுத்துவிட்டனர்.

அதில் ஒன்று தான் டி.நகர் ரங்கநாதன் தெரு. அங்கு திரளாகக் கூடி கிரிக்கெட் விளையாட துவங்கிவிட்டனர்.

இத்தனை நாள் வீட்டுக்குள் வீடியோ கேம் என முடங்கி கிடந்த நண்டு, சுண்டுகள் கூட கொரோனாவா? நாங்கலாம் மோமோ சேலஞ்சையே அசால்டா பண்ணிடுவோம்.

கொரோனோ என்ன பண்ணுதுன்னு பாத்திடுவோம்னு பாப்ஜி கேம்-யை விட்டு விட்டு தெருவில் இறங்கி கொரோனா வைரஸ் தெரிகிறதா என தேடத் துவங்கிவிட்டனர்.

பரிதாபத்தில் பெற்றோர்கள்

வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்யலாம் எனக் கோரியது தான் மிச்சம், வீட்டில் நிமிஷத்திற்கு டீ கேட்டு டார்ச்சர் செய்கின்றனராம் ஆண்கள்.

போத குறைக்கு தம் வேறு அடிக்க வேண்டும். வீட்டில் பலருக்கு தங்கள் பிள்ளை தம் அடிப்பது தெரியாது. இதை எப்படி சமாளிக்க போகிறார்களோ?

பள்ளியும் விடுமுறை, குழந்தைகளை சமாளிப்பதோ மிகவும் சிரமம், வீட்டில் எதையாவது உடைத்து விடுவார்கள் என தெருவில் விளையாட பலர் அனுமதித்துவிட்டனர்.

எங்க ஏரியா உள்ள வராத!

(saravana stores, absolute barbecue, coal barbeque, ags t nagar)

எங்க ஏரியா உள்ள வராத என்பது அண்ணாச்சி சரவணனுக்கு மட்டும் இல்ல, கொரோனா வைரசுக்கும் தான். தாங்கள் கட்டியுள்ள புதிய ஸ்டேடியம் டம்.. டும்.. டிங் என அதிர வைக்கும் அளவிற்கு அடித்து நொறுக்குகின்றனர்.

இன்னும் சில தினங்களில் வீட்டுக்குள் உட்கார்ந்து ஐபிஎல் பார்க்கும் பசங்களை வீதிக்கு வந்து ஸ்டேடியம் கட்ட வைத்து விட்டது கொரோனா.

ஐபிஎல் இல்லை என்றால் என்ன கொரோனா பிரிமியர் லீக் போட்டியில் வா தோனி… வந்து விளையாடு என கோரசாக சத்தம் கொடுக்கின்றனர்.

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம், தோனியின் காதுக்கு இது எட்டியதா எனத் தெரியவில்லை. இந்த செய்தி மூலம் எட்ட வைப்போம். சென்னையில் சின்ன சம்பவம் நடந்தாலும் அது தரமான சம்பவமாக தான் இருக்கும்.

Previous article7 நிமிஷத்துல சீரழித்தவர்களுக்கு 7 ஆண்டுக்குப் பிறகு தூக்கு: வரலட்சுமி சரத்குமார்!
Next articleCoronavirus லிருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காப்பாற்றுங்கள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here