சென்னை: தமிழகத்தில் வசிக்கும் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிசெல்வதற்காக செவ்வாய்கிழமை மாலை வரை அரசு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அதிக தொழிலாளர்கள் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்தவர்கள். ” சில தொழிலாளர்கள் தாங்கள் வீடு திரும்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் விடுப்பட்டு விடாமல் இருப்பதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவதற்கான திட்டத்தினை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கொரோனா பாதித்துள்ள இந்த நிலையில் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்கள் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.”
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் 33,000 தமிழர்கள் தாங்கள் தமிழகம் வருவதற்காக இணையதளத்தில் (https://rttn.nonresidenttamil.org), பதிவு செய்துள்ளனர், தமிழக அரசு விரைவில் வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் தமிழகம் வர நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிடும, என தெரிகிறது.
“அவ்வாறு தமிழ் நாட்டுக்குள் வருபவர்களை 28 நாட்கள் தனிமை படுத்தல் வேண்டும் ஏனென்றால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனாலும் மற்றும் தனிமை படுத்த ஏற்பாடுகள் செய்ய இன்னும் அதிக இடம் தேவை படுவதாலும் தமிழக அரசு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் தமிழர்களை திரும்ப அழைப்பதில் தாமதம் செய்யும்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.