சென்னை: வெட்டுகிளி கூட்டம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியதை அடுத்து தெற்கு நோக்கிய காற்றின் மூலம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்குமா? என்ற அச்சம் அனைவருக்கும் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு
இருப்பினும் வரலாறு மற்றும் ஜோத்பூரில் உள்ள வெட்டுகிளி ஏச்சரிக்கை மையம் தெரிவித்த தகவலை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்திற்கு வெட்டுகிளிகலால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அப்படி நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அந்த துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
“தமிழக அரசு வெட்டுகிளி பிரச்சனை குறித்து இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெட்டுகிளி எச்சரிக்கை மையம் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்தது. அப்போது அந்த வெட்டுகிளிகள் விந்திய சாத்புர மலைகளை கடந்து தமிழகம் வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த நாட்களில் எந்த வெட்டுகிளி தாக்குதலும் தக்காணப் பீடபூமியை கடந்து பரவ வில்லை. ஆகையால் தமிழ்நாட்டில் வெட்டுகிளி தாக்குதலுக்கு மிகவும் அரிதாகவே வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் வெட்டுகிளிகளின் படையெடுப்பை கண்கானித்து வருகிறோம்,” என மாநில அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இராஜஸ்தானில் 33 மாவட்டங்கள் பாதிப்பு, ₹. 1000 கோடி இழப்பு
இராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் வெட்டுகிளி அட்டகாசம் செய்துள்ளது. இந்த வெட்டுகிளி கூட்டம் பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் மாவட்டங்களை முதலில் பாதித்தது அடுத்து காற்றின் திசையில் பயணித்து தற்போது ஜெய்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகம் வரை பரவியது.
இராஜஸ்தான் அரசு 6.70 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் வெட்டுகிளிகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது மற்றும் இதன் மதிப்பு ரூ.1000 கோடிகள் என தெரிவிக்கப்படுகிறது.
பாலைவன வெட்டுகிளிகள்
இந்த வெட்டுகிளி படையெடுப்பு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டிய பாலைவனப்பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடும் எனவும் ஒரு சதுர கிலோமீட்டரில் 4 கோடி வெட்டுகிளிகள் இருக்கும் எனவும் இவை ஒரு இரவில் 80,500 கிலோ பயிர்களை நாசம் செய்ய வல்லவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.