சென்னை: நடிகர் இரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை தொலைபேசியில் தெரிவித்தது கடலூரின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எனவும் அவர் கற்கும் திறனில் குறைபாடு உடையவர் என்பதும் காவல் துறை தெரிவித்தனர்.
காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்
வியாழக்கிழமை அந்த தொலைபேசி அழைப்பு வந்த உடனேயே காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரஜினிகாந்தின் வீட்டை நோக்கி விரைந்தனர்.
கொரோனா பரவல் இருப்பதால் ஆரம்பத்தில் நடிகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அக்குழுவை அவ்வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு அந்த தொலைபேசி செய்தி பொய் என தெரியவந்தது.
கடலூரின் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு சிறுவன்
அந்த தொலைபேசி எண்ணின் முகவரியை கண்டுபிடித்த காவல் துறை அது கடலூரின் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு சிறுவன் என தெரியவந்தது.
அச்சிறுவனது தந்தை மன்னிக்குமாறு காணொளி வெளியீடு
மேலும் அந்த சிறுவன் கற்றல் குறைபாடு உடையவர் என தெரியவந்தது. இதற்கிடையில் அச்சிறுவனது தந்தை தனது மகனின் இச்செயலை மன்னிக்குமாறு நடிகரிடம் வேண்டுதல் விடுக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டார்.