Home Latest News Tamil தமிழக ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள்; அமைச்சர்கள், முதலமைச்சர் ஆலோசனை இன்று

தமிழக ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள்; அமைச்சர்கள், முதலமைச்சர் ஆலோசனை இன்று

571
0

தமிழக ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள்; அமைச்சர்கள், முதலமைச்சர் ஆலோசனை இன்று, ஊரடங்கு நீட்டிப்பு, தகர்ப்பு பற்றி முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

தற்போது கேரளா அரசு ஊரடங்கை தகர்த்தி சில கட்டுப்பாடுகளுடன் கேரளா மாநிலத்தை செயலாபடுத்தி வருகிறது.

அதே போல் தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்கு மாற்றலாம் என யோசித்து வருகிறது.

50 சதவீத ஊழியர்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள், கொரியர் சேவைகள் நடைபெறலாம்.

தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் கடைகள், நெடுஞ்சாலை ஓட்டல்கள்,

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்க உள்ளது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றாலும், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த குழு எடுக்கும் முடிவின் பேரில் தான் தமிழகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். தமிழகத்தில் இது வரை கொரோனோவால் 1395பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 15 பேர் உயிரழந்துள்ளனர்.

Previous articleடிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்!
Next articleகனடாவில் துப்பாக்கிச்சூடு குறைந்தது 16 பேர் உயிரழப்பு
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here