தமிழ்நாட்டில் கொரோனா எந்தெந்த இடத்தில் எவ்வளவு பாதிப்பு ரிப்போர்ட், தமிழ்நாடு கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக, tamilnadu corona cases by district
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 492 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூரில் 624 , கன்னியாகுமரியில் 1016 , ஈரோட்டில் 696, தஞ்சாவூரில் 844 , கோவை 739 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் திருச்சியில் 598, திருவாரூரில் 414 , சிவகங்கையில் 498 , நெல்லையில் 473 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொசு மூலம் கொரோனா வைரஸ் பரவி வருகிறதாமே? WHO விளக்கம்
புதுக்கோட்டையில் 439 , சேலத்தில் 199 , திருப்பூரில் 172 , மதுரையில் 160 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர், ஈரோட்டில் 3, சேலத்தில் 5, திருப்பூர், மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26ஐ தாண்டியது. மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருப்போரை தனிமைப்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலோனோர் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தோர்.