ஆவின் பால் & பால் பொருட்களை டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு, ஜோமாட்டோ மற்றும் டன்சன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்கள் டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படவுள்ளதால் அனைத்து பொருட்களுமே டோர் டெலிவெரி செய்யும் நிலை வந்திருக்கிறது.
இதனிடையே சோமாட்டோ மற்றும் டன்சன் ஆகிய நிறுவனங்களிடம் முதல்வர் பேசி வருவதாக அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.