கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளையை கொலை செய்த காரணத்திற்காக இரண்டு இளைஞர்கள் கைது.
பாப்பாரப்பட்டியை இளைஞர்கள் கைது
காளையை கொலை செய்தவர்கள் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கே. லோகேஷ், 23, மற்றும் எம். பெரியசாமி, 19 என தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை தற்போது இவர்களை கைது செய்துள்ளனர்.
காளையை உடற்கூறு ஆய்வு செய்தனர்
சனிக்கிழமை கால்நடை மருத்துவர்களின் குழு கொல்லப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர்.
காளை காயங்களுடனும், கொம்புகள் உடைக்கப்பட்டு இறந்து கிடந்தது
காவல் துறை தெரிவிக்கையில், இறந்த ஜல்லிக்கட்டு காளையின் சொந்தகாரரான சென்னசன்றத்தின் கிராம நிர்வாக அலுவலர் கே. வெற்றிவேல் ஜூன் 5ந்தில் தனது காளை மாடு வாயில் காயங்களுடனும், கொம்புகள் உடைக்கப்பட்ட நிலையிலும் தனது வயலில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார்.
அன்றே இறந்த மாட்டை புதைத்துள்ளார்
மாடு மரத்தில் சென்று முட்டிக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளது என தவறாக எண்ணிய கே. வெற்றிவேல் அன்றே இறந்த மாட்டை புதைத்துள்ளார்.
டிக் டாக் காணொளி
5 நாட்கள் கழித்து டிக் டாக்கில் எதேச்சையாக சில நபர்கள் குடிபோதையில் அந்த மாட்டை துன்புறுத்துவது போன்ற காணொளியை காண நேர்ந்தது.
மரத்தில் மோதிய போது ஏற்பட்ட காயம்
இதனை அடுத்து குடித்துவிட்டு துன்புறுத்துபவர்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் மோதிய போது ஏற்பட்ட காயத்தால் அந்த காளை மாடு இறந்துள்ளது தெரியவந்தது.
காவல் நிலையத்தில் புகார்
இதை அடுத்த கே. வெற்றிவேல் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜல்லிகட்டு விளையாட்டுகளில் பங்கெடுத்த காளை
இவர் இந்த காளையை இரண்டு வருடங்களாக வளர்த்து வருபவர். சில ஜல்லிகட்டு விளையாட்டுகளிலும் இறந்த காளை பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.