Home நிகழ்வுகள் தமிழகம் வீட்டில் மது தாயாரிக்க முயன்றவர்கள் போலீஸ் வலையில் சிக்கினார்கள்

வீட்டில் மது தாயாரிக்க முயன்றவர்கள் போலீஸ் வலையில் சிக்கினார்கள்

385
0

வீட்டில் மது தாயாரிக்க முயன்றவர்கள் போலீஸ் வலையில் சிக்கினார்கள், இணையத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மது தாயாரிக்க முயன்ற இருவர் கைது.

மே 3ஆம் தேதி வரை நாடே ஊரடங்கில் இருப்பதால் மது பானங்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிக்கு அடிமையாகி இருந்தோர் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாற்று போதை பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தேவை இல்லாததை குடித்து உயிரும் போகிறது சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து இவருக்கு வினோத் ராஜா என்ற நண்பர் உள்ளார். இருவரும் மது பிரியர்களாக இருக்கும் நிலையில் ஊரடங்கால் கடைகள் இல்லாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.

இருவரும் இணைந்து யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முடிவு செய்து திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை வைத்து மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் ராகுல் மற்றும் நண்பர் வினோத் ராஜா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleWorld Heritage Day 2020 Theme; உலகப் பாரம்பரிய தினம் 2020 தீம்
Next articleஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை யார் யாருக்கெல்லாம் தெரியுமா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here