நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தனது தேமுதிக தலைமை அலுவலகத்தையும் மற்றும் அவருடைய கல்லூரியும் கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன் மற்றும் பார்த்திபன் போன்றவர்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தை கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தற்போது தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தாமாக முன்வந்து தனது சமூக வலைதளத்தில் தேமுதிக கட்சி அலுவலகத்தையும் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரியையும் கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
தேமுதிகவின் லெட்டர் பேட் மூலம் தனது கையொப்பத்துடன் பகிர்ந்துள்ளார். இதை பலரும் பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க , காஞ்சிபுரம் மாவட்டம் – ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சென்னை – தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.@CMOTamilNadu | #CODVID19 pic.twitter.com/dif9N1q7Fa
— Vijayakant (@iVijayakant) April 6, 2020
அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள விஜயகாந்த் தனது உடல்நிலை சரியில்லாத போதிலும் மக்களுக்கு நல்லது செய்யும் என்னத்தை மறக்கவில்லை.
மக்களுக்காக வாழும் தலைவர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம்