ரஜினி அரசியல் எண்ட்ரி; எப்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி தமிழருவி மணியன் கூறுவது என்ன?
ரஜினியின் அரசியல் ஆரம்பம்
30 ஆண்டுகளாக அரசியலில் நிற்பார் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை ரஜினியின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினி வரும் ஏப்ரல் 14-ல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.
மாநாடு மற்றும் சுற்றுப்பயணம்
ஏப்ரல் 14-ல் கட்சி அறிவித்த பிறகு ஆகஸ்டில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த திட்டம் இருப்பதாகவும், அதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம் இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினி கூட்டணிக் கட்சிகள்
பாமக அல்லது பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இருப்பினும் அது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கண்டிப்பாக டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார்.
நிறைவேறுமா ரஜினியின் கட்சி ஆரம்பிக்கும் பணி
தொடர்ந்து தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே பேசி வரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்து பின்னர் தோல்வியுற்றது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற பாஜக பின்புலமாக செயல்படுகிறது என்றும் ரஜினியின் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் கூறப்படுகிறது.
எனவே ரஜினி இந்த முறை நிச்சயம் ஏப்ரல் 14-ல் கட்சி துவங்குவார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.