Home நிகழ்வுகள் தமிழகம் மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து பலி: தஞ்சை

மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து பலி: தஞ்சை

மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது

தஞ்சாவூர்: புதன்கிழமை மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தனது மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. மாட்டையும் காப்பாற்ற முடியாமல் தானும் இறந்தார்.

பலியானவர் பெயர் டி. சரோஜா வயது 53, ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சார்ந்தவர் என்பது தெரிகிறது. விவசாய நிலத்தை மேய இருந்த தனது மாட்டை கட்டுபடுத்த நினைத்த போது இந்த துயர சம்பவம் நடந்தததாக தெரிகிறது.

மின்சாரம் பாய்ந்த மாட்டை காப்பாற்ற சென்ற சரோஜா

மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை தனது மாடு தொட்ட உடன் உயிருக்கு போராடியதை அறிந்த சரோஜா, உடனடியாக சென்று அதை காப்பாற்ற முயன்றார் ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அவர் உயிர் இழந்தார்.

ஒரத்தநாடு காவல் துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது மற்றும் சரோஜாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வு செய்ய அனுப்பியது. கால்நடை மருத்துவர்கள் இறந்த மாட்டிற்கு உடல்கூறாய்வை செய்தார்கள்.

மற்றொரு இடத்தில் 5 மாடுகள் பலி

5 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவமும் அதே மாவட்டத்தில் பூதலூர் என்ற இடத்தில் நடந்தது. திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி இந்த மாடுகள் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து மாடுகள் பரிதாபமாக இறந்தன.

மாடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here