Home நிகழ்வுகள் தமிழகம் 14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் கொலை, 3 பேர் கைது கோவை

14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் கொலை, 3 பேர் கைது கோவை

14 வயது மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த

கோவை: பொள்ளாச்சி அருகே சூலேஸ்வரன்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த  14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் மூன்று பேரால் தாக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தாக்கியவர்கள் அந்த பெண்ணின் 16 வயது அண்ணன், அவளின் தந்தை மற்றும் அந்த பெண்ணின் மாமா என தெரியவந்துள்ளது. அந்த மூன்று பேரால் வெள்ளி இரவு தாக்கப்பட்டவர் பொள்ளாச்சி அருகில் இருக்கும் சின்னம்பாலயத்தில் அலகப்பா காலனியில் வசிக்கும் ஆர்.கவுதம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தனியாக இருந்த மாணவியை சந்தித்த வாலிபர்

கவுதம் ஒரு தொழிலாளி எனவும் அவர் அந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மானவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார் மற்றும் சம்பவம் நடந்த வெள்ளி அன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை சந்தித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதை பார்த்த மாணவியின் தாய் உடனே அந்த இருவரையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தனது கனவருக்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனே அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் உருட்டுகட்டை மற்றும் கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அந்த வாலிபரை தாக்கியதால் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டன.

மூன்று பேர் கைது

இதை அடுத்து சுயநினைவை இழந்த அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து தாக்கப்பட்ட வாலிபரின் தாய் கொடுத்த புகாரை ஏற்று தாக்கிய மூன்று பேர் மீதும் இ.பி.கோ 323, 324 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அம்மூவரையும் கைது செய்தனர்.

பின்னர் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்ததை அடுத்து காவல் துறை அந்த வழக்கை இ.பி.கோ 302 ஆவது சட்ட பிரிவுக்கு மாற்றம் செய்தனர்.

 

Previous articleசரியாக திட்டமிடாத அரசு அமைப்பை கேள்வி கேட்போமா? வெற்றிமாறன்!
Next articleபோச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here