ஜோஸ் பட்லர் தனது உலகக்கோப்பை ஜெர்ஸியை ஏலத்தில் விட காரணம் என்ன? இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை ஏலமிட்டு நிதி திரட்ட முடிவு.
இங்கிலாந்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அதற்கு நிதி திரட்ட தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டி இறுதி போட்டியில் இங்கிலாந்து நியூ சிலாந்து அணிகள் மோதின. இன்று வரை பௌண்டரி விதிமுறை மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது சர்ச்சையாக உள்ளது.
I’m going to be auctioning my World Cup Final shirt to raise funds for the Royal Brompton and Harefield Hospitals charity. Last week they launched an emergency appeal to provide life saving equipment to help those affected during the Covid-19 outbreak. Link to auction in my bio. pic.twitter.com/ODN9JY4pk1
— Jos Buttler (@josbuttler) March 31, 2020
அதில் கடைசி பந்தில் பட்லர் செய்யும் ரன் அவுட்டை பார்க்கும் பொழுது உடம்பெல்லாம் புல் அரிக்கும். இங்கிலாந்து வென்ற முதல் உலகக்கோப்பை இது தான்.
இதுவரை இங்கிலாந்தில் 22400 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1412பேர்க்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.