Home தொழில்நுட்பம் யுபிஐ – ஒரு நொடியில் பணம் அனுப்புவது எப்படி?

யுபிஐ – ஒரு நொடியில் பணம் அனுப்புவது எப்படி?

503
0
யூபிஐ upi

யுபிஐ முறையில் நீங்கள் ஒரு நிறுவனத்துக்கோ அல்லது தனி நபருக்கோ கார்ட் எண், சி‌வி‌வி எண், அக்கவுண்ட் எண் அல்லது ஐஃப்எஸ்சி கோட் இல்லாமல்கூட ஒரு நொடியில் பணம் அனுப்ப இயலும்.

நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின் படி யுபிஐ முறையின் மூலம் இதுவரை 1 ட்ரில்லியன் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுபிஐ – (UPI)

கடந்த 2016ஆம் ஆண்டு யு‌பி‌ஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகமானது அப்பொழுது, தனிநபர்களின் அக்கவுண்டுக்கு மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய இயலும்.

கடந்த இரண்டு வருடங்களில் எதிர்பாராத அளவுக்கு யு‌பி‌ஐ முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஆன்லைனில் நீங்கள் பொருட்கள் வாங்குவது, கட்டணம் செலுத்துவது, நிறுவனத்திற்கு பணம் செலுத்துவத்துவது போன்ற அனைத்து செயல்களும் இதில் நீங்கள் மிகவும் எளிமையாக  செய்ய இயலும்.

2018ஆம் ஆண்டுகளில் பெரும்பலான நிறுவனங்கள் யு‌பி‌ஐ முறையை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

ஐ‌ஆர்‌சி‌டி‌சி, ஒயோ ரூம்ஸ், பூக்மைஷோ, அமேசான், பேடிம் மற்றும் போன்பே   போன்ற அனைத்து நிறுவனங்களும் யு‌பி‌ஐ முறையை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

வெறும் யு‌பி‌ஐ ஐ‌டி இருந்தால் மட்டுமே நீங்கள் எளிதாக பணத்தை அனுப்பலாம். உங்களுடய வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் கார்ட் எங்களைவைத்துப் பதிவுசெய்து நீங்கள் உங்கள் யு‌பி‌ஐ ஐ‌டி‌யை பெறலாம்.

name@bankname அல்லது phonenumber@upi இந்த வரிசையில் உங்கள் யு‌பி‌ஐ ஐ‌டி உருவாகி இருக்கும்.

அதை நீங்கள் பதிவு செய்து உங்களுக்குக்குத் தேவையான பணத்தை தேர்வு செய்து அனுப்பினால் சில வினாடிகளில் பணப்பரிமாற்றம் நடக்கும்.

உங்கள் மொபைல் போனின் செயலியிலயே நீங்கள் எளிதாக பணத்தை அனுப்ப இயலும். பிம், கூகுள் பே போன்ற செயலிகள் இதற்காகவே கொண்டு வரப்பட்டவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here