Home ஆன்மிகம் வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் முக்கிய திருநாள் கொண்டாடப்பட்டது

வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் முக்கிய திருநாள் கொண்டாடப்பட்டது

முருகப்பெருமானின் முக்கிய

சென்னை: வைகாசி விசாகம் தமிழ்கடவுளான முருகப்பெருமானின் முக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டின் பெரும்பாளான கோவில்களில் பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயில்களில் பூஜைகள் நடைபெற்று வர கொரோனா பரவலால் கோவிலுக்கு செல்ல முடியாத முருக பக்தர்கள் வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர்.

பிரச்சனைகள் விலகும் வளம் பெருகும்

இந்த நாளில் பால் பழம் அருந்தி விரதமிருந்து முருகனை வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும், குழந்தை பேரு கிட்டும், வீடு, மனை, வாகனம் போன்றவை அமையும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.

வைகாசி விசாகம் என்னும் திருநாள் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த முருகப்பெருமான்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த அக்னியிலிருந்து முருகப்பெருமான் தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என புராணங்கள் கூறுகின்றன.

ஆக இந்த முருகப்பெருமானுக்கு  சிறப்பு வாய்ந்த நாளில் முருகனை வழுபடுவோருக்கு  அல்லல்கள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் சகல வளங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

Previous articleபிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் லேடி சூப்பர்ஸ்டார்
Next articleசென்னை கொரோனா:தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியில் சுற்றுவதை பார்த்தால் நடவடிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here