தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? – பாங்கார் கூறியது என்ன?
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கிடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் நான்காவது போட்டியை துணை கேப்டன் ரோஹித் லீட் செய்கிறார்.
தசைப்பிடிப்பு காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் தோனி விளையாடவில்லை. நான்காவது போட்டியில் தோனி இல்லாததால், மிடில் ஆர்டரில் பெரிய குழப்பம் ஏற்பட்டு சிதைந்தது.
போட்டியை சரிவில் இருந்து பொறுமையாக மீட்க தோனியின் நிதானமான ஆட்டம் தேவை. தோனி அணிக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து உதவி பயிற்சியாளர் கூறியது
உதவி பயிற்ச்சியாளர் சஞ்செய் பாங்கார் கூறியதாவது ‘தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். கண்டிப்பாக இறுதி போட்டியில் பங்கேற்பார்’.
தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது இந்திய அணியின் மிடில் ஆர்டர்க்கும் ஸ்பின்னர்களுக்கும் இன்னும் உதவியாக இருக்கும் எனக் கூறினார்.