வெற்றி… வெற்றி… ட்ரம்ப் ட்விட்டர் பதிவு. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்த கையோடு அமெரிக்கா சென்ற ட்ரம்ப், ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தியா வருகை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையான நல்லுறவை மேம்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் வாங்க பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் முடிந்து அமெரிக்க திரும்பிய ட்ரம்ப், இந்திய சுற்றுபயணம் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமான பயணமாக மாறியுள்ளது என ட்விட் செய்துள்ளார்.
ட்ரம்ப் மகள் இவாங்கா, அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக உறவு மற்றும் பொருளாதார உறவு வலுபெறும் என ட்விட் செய்துள்ளார்.