Tumbbad Unknown Facts; தும்பாட் உண்மைக்கதையா?, Is Tumbbad Real Story? Who is Hastar? Is Tumbbad Real Village?
உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அதில் நாம் இன்று பார்க்கப்போகும் தும்பாட் திரைப்படமும் ஒன்று.
2018ஆம் ஆண்டு ராகி அனில் பர்வே இயக்கத்தில் ஹிந்தி மொழியில் வெளியான பீரியாடிக் ஹாரர் திரைப்படம் தான் தும்பாட் ஆகும்.
இப்படத்தின் கதையை ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் பேராசை பெறு நஷ்டம் என்பது தான். என்னடா அதரப்பழைய கதைனு நினைக்காதீங்க படம் அப்பிடி இருக்காது.
Tumbbad Unknown Facts
இப்படத்தில் தும்பாட் கிராமத்தில் அடிக்கடி மழை வரும். இதில் வரும் அனைத்து மாழைகளுமே உண்மையான மழை. நான்கு வருட பருவ மழைகளில் கொஞ்சம் கொஞ்சமாக படம் பிடிக்கபட்டது.
மழையில் அதிக காட்சிகள் அமைத்ததால் வாய்ஸ் ரெகார்டின் 7 முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.
இதில் வரும் சில முக்கியமான தேவியின் கரு, கோட்டையின் உட்புறம் மற்றும் பிற ஹாரர் காட்சிகள் அனைத்துமே செட் செய்து எடுக்கப்பட்டதாம். CGI அதிகமா பயன்படுத்தப்படவில்லையாம்.
Is Tumbbad Real Village?
தும்பாட் என்னும் கிராமம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொங்கன் பகுதியில் இருக்கும் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ளது. படத்தில் காட்டுவது போல் இல்லை. படத்தில் காட்டப்படும் கோட்டை தும்பாட் பகுதியில் அமைந்துள்ளது.
அங்கு வசிக்கும் மக்களும் படத்தில் காட்டுவது போல அந்த ஊரில் ஒரு புதையல் இருப்பதாக நம்புகின்றனராம்.
Who is Hastar?
இந்திய வரலாற்றில் ஹஸ்தர் என்னும் பெயரில் எந்தக் கடவுளும் இருந்ததாக சான்று இல்லை. ஹஸ்தர் என்னும் கடவுள் மிகப்பெரிய பேராசை கொண்டவர்.
கிரேக்க எல்டர் காட்ஸ் ஆஃப் டைட்டன் என்னும் கடவுள் இதே குணத்தை கொண்டிருக்கிறார். மம்மூன் என்னும் இன்னொரு கடவுளும் இதே குணாதிசியம் கொண்டுள்ளனர்.
Is Tumbbad Real Story?
தும்பாட் உண்மைக்கதை என்று படக்குழுவினர் பக்கம் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வரலாற்றிலும் இதைப்பற்றி எதுவும் இல்லை.
கற்பனை கதையை ஒரு கிராமத்துடன் இணைத்து சிறந்த உலகத்தரமான சினிமாவாக ராகில் அனில் பர்வே கொடுத்துள்ளார். நேரமிருந்தால் கட்டாயம் இப்படத்தை பார்க்கவும்.