Ai Fen Video: கொரோனவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கும் காரணம் என்று புலம்பும் சீன மருத்துவர். கொரோனாவை சீனா திட்டமிட்டு பரப்பியதா?
கொரோனா என்னும் கொடிய வைரஸ்
தற்போது உலகமே முடங்கி கிடைப்பதற்கு காரணம் இந்த கொரோனா எனும் கொடிய நோய்தான். எங்கிருந்து வந்தது?
எப்படி இது பரவுகிறது? என்றும் தெரிந்து கொள்வதற்கு முன்பே உலகில் இருக்கும் 50000-க்கும் மேற்பட்டோரை கொன்று விட்டது.
மருத்துவர் ஐஃபென்
பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவை கண்டுபிடித்த முதல் சீன மருத்துவரான ஐஃபென் (ai fen), ஒரு பரபரப்பு விடீயோவினை வெளியிட்டுள்ளார்.
கொரோனவைக் கண்டுபிடித்த நானே இத்தனை பேர் பலியாகக் காரணமாக அமைந்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, முதல் முதலாக ஒரு நபர் காய்ச்சல் என்று என்னிடம் வந்தார். பின்னர் உடலில் பல பாகங்கள் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரின் ரத்த மாதிரிகளை நான் ஆய்வுக்கு அனுப்பினேன்.
அவர்கள் கூறியது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த சார்ஸ் எனும் வைரஸின் மாதிரியை போல் ஒரு புதிய வைரஸ் இவரை தாக்கியுள்ளது என்று கூறினார்.
உடனே நான் இதை என்னுடைய நெருங்கிய மருத்துவரிடம் கூறினேன், அவர் இதனை பற்றி வெளியில் சொல்லவேண்டாம் என்று கூறினார்.
இந்த செய்தி அரசின் காதுகளுக்குப்போய் அங்கிருந்தும் இதை பற்றி வெளியில் பேச வேண்டாம் என்று எனக்கு மிரட்டல்கள் வந்தது. நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.
அந்த சமயத்தில்தான் வூஹானில் (Wuhan) பலர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.
கொரோனா (Corona) என்று பெயர் வைப்பதற்கு முன்னால் மர்மக்காய்ச்சல் என்ற பெயரில் பலர் இறந்துள்ளனர்.
அதை எல்லாம் சீன அரசாங்கம் வெளியிடவில்லை. இந்த வைரஸ்தொற்று கடந்த வருடம் நவம்பர் மாதமே பரவத் தொடங்கியது.
இது தெரியாமல், அரசும் இதனை அரசியல்போக்கில் பார்த்ததனால் தற்போது இத்தனை பேருக்கு பரவியுள்ளது. இதற்கு நானும் ஒரு காரணம் என்று மிகவும் மனம் வருந்தி பேசினார்.
சீனாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நபர் பற்றி அரசுக்குத் தெரியும் ஆனால் உண்மையை மறைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சீன அதிபர் முதலில் இது அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் இதை பரப்பியது எனக் கூறி அரசியல் செய்தார். ஆனால் இன்றோ அமெரிக்க நாடே கொரோனாவை தடுக்கமுடியாமல் விழிபிதுங்கி உள்ளது.
சீனா இந்த வைரஸை அவர்களுடைய நாட்டில் மட்டும் கட்டுப்படுத்திவிட்டு உலக நாடுகளுக்கு பரப்பி விட்டுள்ளது ஐஃபென் மூலம் உறுதியாகியுள்ளது.
இப்படி அவர் பேசி வீடியோ (ai fen video) வெளியிட்ட பின்பு அவரைக் காணவில்லை. அவரின் நெருங்கிய நண்பர்கள்கூட அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
அரசின் கட்டளையை மீறி இந்த விஷயங்களை வெளியில் கூறியதால் பயந்து தலைமறைவாகிவிட்டாரா அல்லது இப்படி பேசியதற்கு அரசு அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதா என்று தெரியவில்லை.