Home நிகழ்வுகள் உலகம் கொரோனா தடுப்பூசியை எலியில் சோதனை செய்ததில் நல்ல முடிவு

கொரோனா தடுப்பூசியை எலியில் சோதனை செய்ததில் நல்ல முடிவு

308
0
கொரோனா தடுப்பூசியை

கொரோனா தடுப்பூசியை எலியில் சோதனை செய்ததில் நல்ல முடிவு, கோவிட்-19 வைரசுக்கு கண்டறிந்த தடுப்பூசியை எலியை சோதனை செய்த அமெரிக்கர்கள்.

உலகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி கண்டறிய போட்டி போட்டு உழைத்து வருகின்றனர். கண்டு பிடித்த மருந்துகளை பரிசோதனை செய்தும் வருகின்றனர்.

அமெரிக்கர்கள் தாங்கள் கண்டறிந்த தடுப்பூசியை எலி ஒன்றுக்கு சோதனை செய்தனர். இதன் விளைவாக எலியின் நோய் எதிர்ப்பு சக்தியில் நல்ல முன்னேற்றம் உள்ளதாம்.

ஓரிரு மாதங்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

Previous articleஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபு தேவா பர்த்டே டுடே!
Next articleசூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்கலையே.. இந்த கொரோனா?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here