கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு உலக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால், உலகத்தின் பல பெருநகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்று மாசு வெகுவாக குறைந்து இருப்பதை காண முடிகிறது.
உலகின் அதிக காற்று மாசு உடைய நகரங்களில் ஒன்றாக கருதப்பட்ட புதுடெல்லியில் காற்று மாசு பெரிதும் குறைந்து பல வருடங்களாக காணக்கிடைக்காத காட்சிகள் பல காண முடிகிறது.
யுனைட்டட் ஸ்டேட்ஸின்(US) வடகிழக்கு பகுதியில் காற்றில் இருந்த நைட்ரோஜன் டை-ஆக்சைடின் மாசு அளவு 30% குறைந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நகரங்களில் காற்று மாசு கணிசமாக குறைந்தது
ரோம் நகரின் காற்று மாசு 49% வரை குறைந்துள்ளது. அங்கு இரவில் நட்சத்திரங்களை நன்றாக இரசிக்க முடிகிறது.
மேலும் மக்கள் வீதிகளில் இல்லாத இந்த நேரத்தில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றுவதை காணமுடிகிறது, உலகம் சுத்தமாகவும் காடு வளம் பெருகுவதை போலவும் உணர முடிகிறது.
இந்த மாற்றத்தை காணும் பொழுது, “ மனிதர்கள் நாம் இந்த சுற்று சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்” என்பதை கண்கூடாக பார்க முடிவதாத டியூக் பல்கலைகழகத்தின் சூழலியல் பாதுகாப்பு விஞ்ஞானி ஸ்டுவார்ட் பிம் தெரிவித்தார்.
கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் பொழுது, மார்ச் மாதத்தில் பாரீஸ் நகரத்தில் 46%, பெங்களூரு நகரத்தில் 35%, சிட்னி நகரத்தில் 38%, லாஸ் ஏஞ்சல்ஸில் 29%, ரியோ டி ஜெனெய்ரோவில் 26%, டர்பன் நகரில் 9% மாசு அளவில் பெரிய அளவு மாற்றத்தை நாசாவின் அளவீடுகள் தெரிவிகின்றன.
இமயமலை காட்சி
இந்தியாவிலும் சீனாவிலும் இந்த சூழலியல் மாற்றத்தை நன்றாக பார்க்க முடிகிறது. ஏப்ரல் 3இல் பஞ்சாப் வடக்கில் இருக்கும் ஜலந்தர் நகர வாசிகள் அன்று அதிகாலையில் ,பலவருடங்களாக பார்க்க இயலாத அந்த அரிய காட்சியான 100 மைல் தொலைவில் இருக்கும் பனிமூடிய இமயமலை சிகரத்தை இரசித்திருக்கிறார்கள்.
இதுபோல் ஒளி மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்ததனால் இந்தியாவிலிருந்து , கோஸ்டா ரிகா மற்றும் ப்லோரிடாவில் முட்டையிடும் ஆமைகளையும் இந்த ஆண்டு கணிசமான அளவு பார்க்க முடிந்ததாக நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் உறவை நாம் சுமூகமாக பாதுகாத்தால் மட்டுமே நம் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியை வாழத்தகுந்த இடமாக விட்டு செல்ல இயலும் என்பது தெரிகிறது.