4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை
4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை என ஹங்கேரிய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாடும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்களை கடைபிடிக்கிறது.
சீனா, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நீண்ட நாட்களாக சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற சட்டத்தை முதியோர்கள் நலன் கருதி சற்று தளர்த்தியது.
அதேபோன்று மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல சலுகைகளை வழங்குகிறது.
அதில் ஒன்று தான் ஹங்கேரிய நாடு. நாட்டின் மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க நான்கு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கிறது.
ஹங்கேரிய பிரதமர் இதுகுறித்து பேசியதாவது, குடியேற்றத்தை மட்டுமே பாராமல், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.
ஹங்கேரியின் வலதுசாரி கட்சியினர் முஸ்லீம்கள் குடியேற்றத்தை எதிர்க்கின்றனர். நாட்டின் மக்கள்தொகையும் ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சரிந்துவரும் மக்கள்தொகையை சரி செய்ய, புதுமணத் தம்பதிகளுக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படுகிறது. மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இது ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.