Home நிகழ்வுகள் உலகம் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்.

258
0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் தற்போது அந்தத் தொற்றில் இருந்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணம் அடைந்துள்ளார்

சீனாவில் உருவான கொரோனா.வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி இத்தாலி, அமெரிக்கா ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிபயங்கரமாக மக்கள் மீது பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்திருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த பல நாடு அரசுகள் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் கனடா பிரதமரின் மனைவிக்கும் உறுதி செய்யப்பட்டது.

தற்போது கனடா பிரதமரின் மனைவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இன்று அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார். இது அந்த அரச குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Previous articleசன் டிவிக்கு நன்றி சொன்ன விஜய் ரசிகர்கள்: அப்படியே அடுத்தவாரம் திருப்பாச்சி?
Next article99 மீனவர்களை மீட்டெடுக்க பவன் கல்யாண் வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here