கொரோனா பாதிப்பு; பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை, ஏற்கனவே கொரோனா பாதிக்கப்ட்ட இவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யபட்டது. இதனிடையில் மருத்துவர்களின் அறிவுரைப் படி அவர் தனிமையில் இருந்தார்.
இதனிடையில் அவருக்கு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது மற்றும் உடலிநிலையில் முன்னேற்றம் தெரிகிறது என அவர் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவில் நடந்தது போல அங்கும் கொரோனா தீவிரமாக பரவும் இந்த நிலையில் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் கை தட்டினார்.
அந்த நேரத்தில் அவரும் வீட்டின் பால்கணியில் இருந்து கை தட்டினார். இருந்தும் அவருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் இன்னும் போகவில்லையாம்.
அதனால் பிரதமருக்கு மருத்துவமனையில் தனிமை பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.