புலிக்கு கொரோனா பாதிப்பு; நியூ யார்க் ப்ரோங்க்ஸ் பூங்காவில், New York’s Bronx Zoo Tiger Coronavirus. நியூ யார்க் புலிக்கு கொரோனா பாதிப்பு.
நடியா எனும் பெயருடைய நான்கு வயது மலேசியன் வகை புலி மற்றும் அதன் தங்கை அசுள், மேலும் இரண்டு அமூர் வகை புலி இவைகளுடன் மூன்று ஆப்ரிக்கா சிங்கங்களுக்கு வரட்டு இருமல் உள்ளது.
மேலும் இவை அனைத்தும் விரைவில் குணமடையும் வேண்டிய மருத்துவ சிகிச்சைகல அளித்து வருகிறோம் என அப்பூங்காவில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று கண்டறியும் பொழுது புலியை பராமரித்த பராமரிப்பாளருக்கு பின்னர் தொற்று இருப்பது தெரிய வந்தது.
பொதுவாக கொரோனா விலங்குகள் மூலம் பரவாது என உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. தற்போது புலிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெரிய வகை பூனை இனங்களில் ஒன்று தான் புலி அவைகளுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற வீட்டு வளர்ப்பு, பிற பிராணிகளுக்கு பரவுவதில்லை.
ஒவ்வொரு உயிரனங்களுக்கு ஒரு விதமாக கொரோனா பரவுவதாக தெரிகிறது. தற்போது இவைகளின் உடல்நிலையை நன்கு கண்காணிப்பதே எங்கள் நோக்கம்.
ஒவ்வொரு விலங்கும் தனிப்பிரிவில் வைத்து சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். விலங்குகள் கொரோனோவால் பாதிப்படைந்தது உலகத்திற்கு மேலும் ஒரு சவாலாக அமையும்.