இஸ்லாமிய பெண்ணிற்காக இரு நாடுகள் பகை! கனடா, சவுதி அரேபியா இடையான நல்லுறவு பாதிப்பு.
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற 18 வயதான சவுதி குடியுரிமை பெற்ற பெண் தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தாய்லாந்து விமானநிலையத்தில் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பிச்செல்ல வலியுறுத்தப்பட்டார்.
பாஸ்போர்ட் பறிமுதல்
ரஹாப்பின் பாஸ்போர்ட்டை சவுதி தூதரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் விமான நிலைய விடுதியின் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டார்.
தான் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டதாகவும், பெற்றோரை பார்க்க விரும்பவில்லை எனவும் கூறி சொந்த நாட்டிற்குச் செல்ல மறுத்துள்ளார்.
ட்விட்டர் பவர்
அவரிடம் இருந்த செல்போன் மூலம் 5-ம் தேதி ட்விட்டர் கணக்கைத் துவங்கியுள்ளார். அவருடைய சூழலை விளக்கி ட்விட் செய்துள்ளார்.
6-ம் தேதி மாலை 17,000 பேர் பின்தொடர்ந்துள்ளனர். 7-ம் தேதி மதியம் 57,000 பேர். 8-ம் தேதி 90,000 பேர் எனப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
உலக அளவில் ரஹாஃப் கவனிக்கதக்க நபராக மாறினார். 3 நாட்களாக ரஹாஃப் அறையைவிட்டு வெளியில் வர மறுத்துவிட்டார்.
ஐநா ஆதரவு
அதன்பின்பே, ஐ.நா. இந்த விசயத்தைக் கையில் எடுத்தது. ரஹாப்பிற்கு அகதி அந்தஸ்து வழங்கியது. ஆஸ்திரேலியாவைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அடைக்கலம் கொடுக்க கேட்டுக்கொண்டது.
ரஹாப்பிற்கு அடைக்கலம் கொடுத்தால் அநேகம் பேர் ஆஸ்திரேலியாவை நோக்கி வருவார்கள் எனவும் சவுதியை பகைத்துக்கொள்ள நேரிடும் எனவும் தயங்கியுள்ளது.
கனடா ஆதரவுக் கரம்
இந்நிலையில் கனடா நாடு, ஐ.நா. வேண்டுகோளின்படி ரஹாப்பிற்கு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, “உலகளவில் மனித உரிமைகளுக்காவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவளிப்பதில் கனடா உறுதியாக உள்ளது.
ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐ.நா. எங்களிடம் கேட்டுக்கொண்டது, அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.
பெண்களின் உரிமைகளுக்காக போராடி கைதானவர்களை, விடுதலை செய்யவேண்டும் எனவும் சௌதி அரேபியாவிற்கு கனடா பிரதமர் கோரிக்கை வைத்தார்.
சவுதி அரேபியா கோபம்
இதனால், ஆத்திரமடைந்த சவுதி அரேபிய அரசு, சவுதி அரேபியாவில் இருந்த கனடத் தூதரை வெளியேற்றியது. கனடா தொடர்பான அனைத்துப் புதிய வர்த்தகங்களையும் முடக்கியது.
ரஹாஃப் மொஹம்மத், உலக அளவில் பரபரப்பான நபராக மாறிவிட்டார். ஒரு பெண்ணால் இருநாடுகள் பகையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.