Home நிகழ்வுகள் ஹார்த்திக், ராகுல்: மனைவியைக் காக்க ஹர்பஜனின் முடிவு!

ஹார்த்திக், ராகுல்: மனைவியைக் காக்க ஹர்பஜனின் முடிவு!

916
0
ஹார்த்திக், ராகுல்

ஹார்த்திக், ராகுல்: மனைவியைக் காக்க ஹர்பஜனின் முடிவு!

ஹார்திக் பாண்ட்யா மற்றும் கே‌.எல்.ராகுல் இருவரும் செல்லும் பேருந்தில் பயணிக்க மாட்டேன் என ஹர்பஜன் சிங் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஹார்த்திக், ராகுல் சர்ச்சை கருத்து:

சமீபத்தில் டி‌.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹார்திக் பாண்ட்யா மற்றும் கே‌.எல்.ராகுல் பதிலளித்த விதம் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது.
.
காஃபீ வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்களைப் பற்றி முரண்பாடான பதில்களைக் கூறினர்.

குறிப்பாக, பாண்ட்யா பதிலளித்த விதம் வெறுக்கும்படி இருந்தது. பெண்களைப் பற்றி இழிவாகவும், மரியாதையில்லாமலும், கிண்டல்செய்து கருத்துக் கூறியிருந்தார்.

இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

கோலி பேட்டி:

கோலி இருவர் குறித்தும் பேட்டியளித்ததாவது, இந்திய அணி இந்நிகழ்வைப் பற்றி எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குத் தேவையில்லை.

இந்திய அணியுடன் இருவரும் தங்க வேண்டாம் எனப் பேட்டியளித்துள்ளார்.

பி‌சி‌சி‌ஐ முடிவு:

இரு வீரர்களையும் தற்காலிகமாக போட்டியில் விளையாட தடைசெய்து உள்ளது. யார் அனுமதியுடன் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

இருவரும் இந்தியா வந்ததும் தனிக்கமிட்டி அமைத்து விசாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

ஹர்பஜன்சிங் கருத்து:

என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் என்னுடன் வரும்போது அவர்களைப் பாதுகாக்க, ஹார்த்திக்குடனும் ராகுலுடன் பேருந்தில் பயணிக்கவோ, உரையாடவோ மாட்டேன்.

ஹார்திக் பாண்ட்யாவின் இச்செயலால் ஓட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் வருத்தப்படும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குமுன் எந்த வீரரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை எனக் கூறினார்.

Previous articleஇஸ்லாமியப் பெண்ணிற்காக இரு நாடுகள் பகை!
Next articleஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here