Home நிகழ்வுகள் இந்தியா ஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!

ஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!

828
0
ஒரு ட்விட்டில்

ஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் சாமுவேல், அமெரிக்கா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார்.

அப்போது குடியுரிமை அதிகாரி ஒருவர், இவரிடம் ஹிந்தியில் பேசி உள்ளார். இவர், எனக்கு ஹிந்தி தெரியாது எனக் கூறியுள்ளார்.

உடனே அந்த அதிகாரி, “அப்போ தமிழ் நாட்டுக்குப்போயி ப்ளைட் ஏறு. ஹிந்தி தெரியலன இங்க ஏன் வந்த தமிழ்நாட்டுக்கே போ” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆப்ரகாம் விமானநிலைய மேலதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போதும் அந்த அதிகாரி ஹிந்தி தெரியாத இவர தமிழ்நாட்டுக்குப் போகச்சொல்லுங்க என தென்வெட்டாக கூறியுள்ளார்.

அதன்பிறகு மேலதிகாரி, ஆப்ரகாமை வேறு கவுண்டருக்கு அனுப்பியுள்ளார். விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் இதைப்பற்றி புகாராக தெரிவிக்காமல் சென்று விட்டார்.

இந்தச் சம்பவம் 8-ம் தேதி இரவு 1 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு இதைப்பற்றி ட்விட்டரில் எழுதியுள்ளார்.

நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதைவிட தமிழனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறன்.

தேசியக்கட்சிகள் மாநிலத்தில் காலூன்ற முடியாமல் போவதற்கு இதுவே காரணம் என ட்விட் மேல் ட்விட் தட்டிவிட்டுள்ளார்.

நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் பல போலீஸ் உயர் அதிகாரிகளையும் டாக் செய்துவிட்டார்.

அவ்வளவுதான் இவ்விசயம் நெருப்பாக பற்றிக்கொண்டது. ட்விட்டரில் ஆதரவுகள் பெருகியது. சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹிந்தியை உயர்த்துவதாக நினைத்து தற்பொழுது அவப்பெயரைச் சந்தித்துள்ளார்.

இந்தியன் என்ற ஒற்றுமையை நிலைநாட்டுவதை விடுத்து, ஹிந்தி திணிப்பை செலுத்த நினைப்பதன் விளைவே இதுபோன்ற மொழிப் பாகுபாடிற்கு வழிவகுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here