ஆன்லைன் பணப்பரிவர்த்தனை: இந்திய ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீங்கள் பேடீஎம், ஃபோன்பே, கூகுள் பே அல்லது வங்கிகளின் செயலிகளை உபயோகிப்பவரா? கட்டாயம் இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கி இணையத்தில் மோசடி செய்து பணம் திருடும் கும்பலிடம் இருந்து நுகர்வோரை பாதுகாக்க பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது.
1. அனைத்து மொபைல் வாலெட் நிறுவனங்களும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்தின் போது வரும் தகவலில், புகார் செய்வதற்கான எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். மர்ம நபர்களால் பணம் திருடப்பட்டால், புகார் செய்வதற்க்கு இது ஏதுவாக இருக்கும்.
2. அனைத்து மொபைல் வாலெட் நிறுவனங்களும் பணப்பரிமாற்றத்தின்போது தகவலை உகந்த நுகர்வோருக்கு அனுப்பவேண்டும். நுகர்வோர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் மொபைல் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்தால் மட்டுமே, மர்ம நபர்கள் பணம் திருடும்போது தடுக்கவும் புகார்செய்யவும் முடியும்.
3. மொபைல் வாலெட் நிறுவனங்கள் 24/7 வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்திருக்கவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. அப்பொழுது தான் தவறு நடந்த உடனே நடவடிக்கை எடுக்க இயலும்.
4. மொபைல் வாலெட்டில் ஒரு நுகர்வோர் எதிர்பாராத விதமாக மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தால், அவருக்கு நிறுவனமே மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அவர் இதை தகவல் மூலமோ அல்லது மெயில் மூலமோ புகார் செய்து இருந்தால் 3 வேலை நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும்.
5. சந்தேகத்திற்கு உட்பட்ட பணப்பரிமாற்றம் எதுவும் நடந்து நுகர்வோர் புகார் செய்யாமல் இருந்தாலும் மொபைல் வாலெட் நிறுவனம் பணத்தை திருப்பி நுகர்வோர் வாலெட்டுக்கு அனுப்ப வேண்டும்.
6. 4 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோரால் புகார் அளிக்கப்படும் பொழுது பண மதிப்பு 10000 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருக்கும்போது நிறுவனம் அதைத்திருப்பி அளிக்க வேண்டும்.
7. ஏழு நாட்களுக்கு பிறகு கொடுக்கப்படும் புகார்களுக்கு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி திருப்பிக் கொடுக்கலாம்.
8. அனைத்துக் குற்றங்களும் புகார் செய்த 10 நாட்களுக்குள் உகந்த தீர்வு காணப்பட வேண்டும்.
9. அனைத்து புகார்களும், தவறு யார் பக்கம் இருந்தாலும் சரி. அது நுகர்வோரோ அல்லது நிறுவனமாகவோ இருக்கட்டும் அதிகபட்சம் 90 நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும்.
10. 90 நாட்களுக்குள் புகார் சரி செய்யப்படவில்லை எனில் நுகர்வோர் இழந்த அனைத்துப் பணத்திற்கும் முழுப்பொறுப்பு நிறுவனமே. அந்நிறுவனமே நுகர்வோர் இழந்த பணத்தை திருப்பி அழிக்க வேண்டும்.
11. கேஒய்சி வெரிபிக்கேசன் (KYC- Know Your Customer) செய்யாத எந்த ஒரு நுகர்வோரும் பிப்ரவரி 2019க்கு பிறகு மொபைல் வாலெட் செயலியை பயன்படுத்த இயலாது.
12. இந்த கேஒய்சி வெரிபிகேசன் மூலம் வருகிற மார்ச் மாதத்திற்கு பிறகு வல்லுனர்களின் கணிப்பின் படி 95% மொபைல் வாலெட் நுகர்வோர்கள் தங்களுடைய செயல்பாட்டை நிறுத்த வாய்ப்புள்ளது.