கொரொனோ வைரஸ்: ட்ரம்பை அவமானப்படுத்திய தமிழர். கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ட்ரம்ப் கூறியது பொய் என அவமானப்படுத்திவிட்டு அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
கொரொனோ வைரஸ் எப்படி பரவியது என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை. சீனா-அமெரிக்கா இரு நாடுகளும் மாறி குற்றம் சுமத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கூகிள் நிறுவனம் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பதிவு செய்வதற்கு என்றே அமெரிக்காவிற்காக தனியாக ஒரு வலைத்தளம் அமைத்து உள்ளது எனக் கூறினார்.
ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களில் கூகிள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மறுத்தார். ட்ரம்ப் பொய் சொல்வதாக கூறி ட்ரம்ப்-யை அவமானப்படுத்தினார்.
கல்யாணம்: கொரோனாவுடன் சென்ற நபர்: சானிடைஸருடன் வந்த ஸ்டாலின் https://t.co/w3YEUMX0WH@mkstalin #கொரோனாவைரஸ் #CoronaVirusUpdate #coronavirusindia #CoronavirusOutbreakindia #CoronaAlert
— Mr Puyal (@MrPuyal) March 19, 2020
இந்த அறிவிப்புக்கு பின், கூகுளின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பாபெட் ட்ரம்ப் கூறியதுபோல் கொரோனாவுக்கு என ஒரு வலைதளத்தை உருவாக்கியது தெரியவந்தது.
இதன்பிறகு ட்ரம்ப் கூறியதாவது, சுந்தர் பிச்சை நல்ல மனிதர். அவர் ஏன் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. இதற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் எனக் கூறினார்.
ஆனால் சுந்தர் பிச்சை தரப்பில் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஏன் சுந்தர் பிச்சை அவ்வாறு கூறினார் என்பதற்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனாவை பரப்பிய பெங்களூரு பெண் https://t.co/OAMmX9upy6 #CoronaVirusUpdates #coronavirusindia #CoronavirusOutbreak #மண்டிபோட்டவாத்தி #ThalapathySpeech
— Mr Puyal (@MrPuyal) March 15, 2020