முதல் முறையாக வைரசை கண்டுபிடித்த வுகான் மாகாணத்தில் முழுமையான 144 ஊரடங்கு உத்தரவை நீக்கியது சீனா. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தான் முதல் முறையாக வைரஸ் தொற்று இருந்த ஒருவரை கண்டுபிடிக்கப்பட்டது.
வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
இந்த வைரஸ் காரணமாக உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாள் மட்டும் 1900 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு தலா 500 பேர்களுக்கு மேல் பலியாகி வருகிறார்கள்.
பிரான்சில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த வைரசுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறையாகியுள்ளனர்.
இந்த வைரசு தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். தற்பொழுது 50 நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக சீனாவில் தோன்றிய வுகான் மாகாணத்தில் ஜனவரி மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. மக்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள்.
இதனால் படிப்படியாக சீன அரசு ஊரடங்கு உத்தரவை நீக்கியது. இன்று ஏப்ரல் 8ம்தேதி வுகான் மாகாணத்தில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை நீக்கியது.
மக்கள் வழக்கம் போல செயல்பட தொடங்கினார். அங்குள்ள தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.