சீனாவை சேர்ந்த விஞ்ஞானி அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியின் புறநகர் பகுதியில் இருந்த அவர் வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் சீனாவை சேர்ந்தவர் எனவும் அமெரிக்காவில் தங்கி கொரோனா வைரஸ்ஸை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆராய்ச்சி பணி
பிங்க் லியூ, 37, என்பவெர் பிட்ஸ்பர்கில் ஒரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த வார இறுதியில் தனது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்ததார்.
அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் 46 வயதுடைய ஹாவோ கு என்பவரும் இறந்து கிடந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக்கோண்டு இறந்துள்ளனர் அல்லது
ஹாவோ கு, சீன விஞ்ஞானியான பிங்க் லியூ வை சுட்டு கொன்றபின் தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என காவல் துறை தெரிவிக்கின்றது.
சமூக வளைதள கருத்து
“பிங்க் லியூ இந்த செயல்பாடற்ற அமெரிக்க அரசால் தான் கொல்லப்பட்டார்,” என சமூக வளைதளத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் “இல்லையேல் அவர் அமெரிக்காவில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்து கண்டுபிடித்து இருப்பார்” என அவர் தெரிவித்து இருந்தார்.
கொலை செய்யப்பட்ட சீன விஞ்ஞானியான பிங்க் லியூ செய்து கொண்டிருந்த ஆராய்ச்சி பணியை தாங்கள் தொடர இருப்பதாக அவருடன் பல்கலைகழகத்தில் வேலை செய்த சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பணிப்போர் நடந்துவரும் வேலையில் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.