வெறும் நான்கு நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு; கொரோனா வேர்ல்ட் அப்டேட்
கொரோனா பாதிக்கப்பட்டோரில் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வருவதற்கு வெறும் 4 நாட்களே ஆகியது என உலக சுகாதார மைய முதன்மை இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கேபிரியேசஸ் கூறியுள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் 380000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா சீனாவில் தொடங்கிய பொழுது முதல் ஒரு லட்சம் நபர்கள் பாதிக்க 67 நாட்கள் ஆனது. ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் ஆக வெறும் 11 நாட்களே ஆகியது.
இப்பொழுது இரண்டிலிருந்து மூன்று வர வெறும் 4 நாட்களில் ஆகியுள்ளது. கொரோனா பாதிக்கும் வேகத்தை பார்க்கையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வீதம் ஆகி விடுமோ என்ற கவலை ஆகிவிட்டது.
நாம் அனைவரும் விழிப்புணர்வாக செயல்பட்டால் மட்டுமே இதை கட்டுப்படுத்த இயலும்.