ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்(UNFPA) அளவுகோளின்படி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகில் அதிக மக்கள் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இந்நிலை நீட்டிக்கப்பட்டால் 70 இலட்சம் பேர் கர்ப்பம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக UNFPA தெரிவித்துள்ளது.
பாலின வன்முறை
பாலின அடிப்படையில் வன்முறைகள் ஏற்படலாம் , வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற இரு நோக்கங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒவ்வொரு 3 மாதங்கள் ஊரடங்கு நீடிப்புக்கும் 1.5 கோடி பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்பட வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
அந்த தகவலின் அடிப்படையில் 114 நாடுகளில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள 4.7 கோடி பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படவும், தேவையில்லாத கருத்தரிப்புகள் உருவாகவும் வாய்புகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
எதிர்பாராத சிக்கல்கள்
இதைபற்றி ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் இயக்குனர் டாக்டர். நடாலியா கனெம் தெரிவிக்கையில் ” இந்த கொரோனா ஊரடங்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களது சுகாதாரம் மற்றும் உடல் நலத்தை பேணுவதில் எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்த வாய்புகள் உள்ளது”, என தெரிவித்தார்.