Home நிகழ்வுகள் உலகம் தீப்பற்றி எரிந்த பேருந்து; 15 பேர் ஸ்பாட் அவுட்

தீப்பற்றி எரிந்த பேருந்து; 15 பேர் ஸ்பாட் அவுட்

328
0
தீப்பற்றி

தீப்பற்றி எரிந்த பேருந்தில் 15 பயணிகள் தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பாகிஸ்தானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள கில்லா சைபுல்லா மாவட்ட எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சாலையில் டாங்கர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

டேங்கர் லாரியில் டீசல் இருந்ததால் உடனே தீப்பற்றியதில் பேருந்தும், லாரியும் எரிந்தது. பேருந்து பள்ளத்திற்குள் விழுந்ததால் உள்ளே இருந்த 15 பயணிகள் அடிபட்டு தீயில் மாடிக்கொண்டனர்.

ஒரு பயணி மட்டும் அதிஷ்டவசமாக ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார். இதுவரை இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டீசல் கடத்திச் சென்ற லாரியால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

சட்டத்திற்குப் புறம்பாக டீசலைக் கடத்தி, விபத்தை ஏற்படுத்தும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாலுசிஸ்தான் மாநில முதல்வர்  தெரிவித்துள்ளார்.

Previous articleதிஷா சட்டம் 2019: 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை
Next articleஉலகின் ஆழமான நிலப்பகுதி எது தெரியுமா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here