திஷா சட்டம் 2019 என்ற புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆந்திர அரசு. ஆந்திர சட்டசபையில் ஒரு மனதாக ‘disha act 2019‘ நிறைவேற்றப்பட்டுவிட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவரை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த நால்வரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்நிலையில், பெண்களை பாதுகாக்க ஆந்திர மாநிலத்தில் இதற்காக பிரத்தியேக சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது ஆந்திர அரசு.
அந்த சட்டத்திற்கு பெயரே ‘திஷா சட்டம் 2019’ என பெயர் வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி பாலியல் குற்ற வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
பாலியல் வழக்குகளை ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து போலீசார் அறிக்கை சமர்பிக்க வேண்டும். நீதிமன்றம் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள், அதிக பட்ச தண்டையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்கள் திஷா சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டமும் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் குறைந்தபட்ச தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரையும், அதிகபட்சமாக 5 முதல் 7 ஆண்டுகள் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.