Home நிகழ்வுகள் உலகம் விமானத்தைக் கடத்தியது நடிகையின் கணவர் – திடுக்கிடும் தகவல்

விமானத்தைக் கடத்தியது நடிகையின் கணவர் – திடுக்கிடும் தகவல்

384
0
விமானத்தைக் கடத்தியது

விமானத்தைக் கடத்தியது நடிகையின் கணவரா? – திடுக்கிடும் தகவல்

வங்காளதேசத்திலிருந்து துபாய் சென்ற விமானத்தை கடந்த 24 தேதி பொலாஷ் அகமது என்பவர் கடத்த முயன்றார்.

அப்போது விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இரு விமானிகள் கடத்தல்காரன் பிடியில் இருந்தனர். வங்காளதேச பிரதமரை நேரில் பார்க்கவேண்டும் என பொலாஷ் கோரிக்கை வைத்தான்.

அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் எனத் தெரிந்ததும் கமாண்டர்ஸ் விமானத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி விமானிகளை மீட்டனர்.

இதில் பொலாஷ் குண்டடிபட்டு இருந்தான். இந்நிலையில் அவன் வங்காளதேச நடிகை ஷிம்ளாவின் முன்னாள் கணவர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அவனது உடலை அவனுடைய உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர் என்ற தகவலையும் கூறினார்.

நடிகை ஷிம்லா வங்கதேச அரசிடம் தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here