அபிநந்தனை வைத்து அரசியல் செய்யவேண்டாம்; ராணுவ வீரரின் மனைவி எச்சரிக்கை வீடியோ
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவீரவாத முகாம்களைத் தாக்கியது.
நம்முடைய ஒரு ஜெட் விமானம் ஒன்று தாக்கப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து ராணுவ வீரரின் மனைவி ஒருவர் வீடியோவில் கூறியதாவது
அனைவருக்கும் வணக்கம், நான் ராணுவ வீரர் மனைவி பேசுகிறேன். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
கணவன், மகன், தந்தை என ஒவ்வொரு குடும்பமும் இழந்து தவிக்கிற இந்த நிலைமையை அரசியல்வாதிகளே உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம்.
ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகத்தை வைத்து நீங்கள் தயவு செய்து ஆதாயம் தேடாதீர்கள். என்னுடைய கணவன் (அபிநந்தன்) இல்லாத இந்த நிலைமையில் நாங்கள் அனுபவிக்கும் கஷ்டமும் வலியும் உங்களுக்குத் தெரியாது.
வீரர்களின் தியாகத்தை வைத்து பேரணி, கட்சி கூட்டம் போன்றவை நடத்த உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை.
பிஜேபி கட்சியே குறிப்பாக உங்களை தான் சொல்கிறேன் வீரர்களின் தியாகத்தை வைத்து உங்கள் அரசியலை செய்யாதீர்கள்.