Home விளையாட்டு காத்திருந்து புடுசிங்களா; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

காத்திருந்து புடுசிங்களா; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

349
0
காத்திருந்து

காத்திருந்து பிடித்தோம் என நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களைப் பற்றி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்தார்.

என்னது.. இந்த வீரரை காத்திருந்து புடிச்சீங்களா? என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வாளர்களை கலாய்க்க துவங்கிவிட்டனர் நெடிசன்களும், ரசிகர்களும்.

நேற்றைய ஏலத்தில் சாம் கர்ரனை 5.50 கோடிக்கும், பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும் சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது.

சாம் கர்ரனை தேர்வு செய்ததற்காக பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் பியூஸ் சாவ்லாவை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டதாக கருத்துக்கள் நிலவியது.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன், கரன் சர்மா என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது மேலும் ஒரு ஸ்பின்னர் தேவைதானா?

பவுலிங்கை நன்கு பலப்படுத்தி எதிரணியினரை திணறடிக்கவே சிஎஸ்கே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

இருப்பினும், பியூஸ் சாவ்லாவின் வருகை எந்த விதத்தில் சிஎஸ்கேவுக்கு உதவும் என்பதை போட்டியின்போது சாவ்லா நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Previous articleஒரு பக்கம் ஏலம்; மறுபக்கம் ஓலம் – பற்றி எரியும் இந்தியா!
Next articleதம்பி திரைவிமர்சனம் – இப்டி சொதப்பிட்டியே ஜீத்து!!!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here