செர்னோபில் அணு உலையை சுற்றி காட்டுத் தீயால் கதிர்வீச்சு அதிகரிப்பு. உக்ரைன் செர்னோபில் விபத்து, சாதாரன அளவை விட 16 மடங்கு கதிர் வீச்சு அதிகரித்துள்ளதாம்.
உலகத்திலையே மோசமான அணுவுலை விபத்து ஏற்பட்ட இடம் உக்ரைனிலுள்ள செர்னோபில். அதை சுற்றிய தடை செய்யப்பட்ட காட்டு பகுதிகளில் சனிக்கிழமை தீ பிடித்தது.
நேற்று ஞாயிற்று கிழமை தீயின் வேகம் அதிகரித்து செர்னோபில் உலையை சுற்றியுள்ள காட்டில் 20 ஹெக்டர் வரை பரவியது. மாற்றொரு பக்கத்திலும் சிறிய தீ பிடித்துள்ளதாம்.
இதனால் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாதாரன அளவை விட 16 மடங்கு அதிகரித்து என சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஏகோர் பிர்ஸோ தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் பிற உபகரணங்கள் மூலம் அணைக்க முயல்கின்றனர். ஆனால் தீ கட்டுபாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறதாம்.
1986ஆம் ஆண்டு செர்னோபில் உலை வெடித்தது. உலகில் அணு உலை வெடித்த விபத்துகளில் இது மோசமான ஒன்று.
இதனுடைய கதிர்வீச்சின் தாக்கம் இன்று வரை கூட இருக்கலாம். அதனால் அணு உலையை சுற்றி 30 கிமீ வரை மக்கள் வசிப்பதற்கு அனுமதி இல்லையாம்.