நிஜ வாழ்க்கையில் தனி ஒருவன்: புல்வாமா தாக்குதல்
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீவிரவாதிகளால் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதை அறிந்த 26 வயதான அமெரிக்க வாழ் இந்தியர் விவேக் படேல் தனி ஒருவராக இதுவரை 8 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் நிதி திரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக பேஸ்புக் பேஜ் ஒன்றை புதிதாக ஓபன் செய்து விபத்து நடந்த நாளில் இருந்தே நிதி திரட்ட ஆரம்பித்து விட்டார்.
இன்று வரை $1,018,252 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி உள்ளார். ஆனால் இன்னும் இது பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடையவில்லை.
இந்தப் பணம் மொத்தமாக நேர்மையான முறையில் இந்திய அரசிடம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார் விவேக்.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திடம் நேரடியாகவே இப்பணத்தை அளிக்க முடிவு செய்துள்ளாராம்.
தன்னுடைய நல்ல எண்ணங்கள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு பேஸ்புக்கில் நிதி திரட்டிய விவேக் படேலை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.