பாம்பை வைத்து உண்மை அறியும் சோதனை: அத்துமீறிய போலீஸ் விசாரணை
இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியா பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் செல்போன் திருடியதாக சந்தேகித்து போலீசார், அவரை கைது செய்தனர்.
குற்றவாளியை எப்படியாவது ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என இந்திய காவல்துறை அதிகாரிகளை விஞ்சிய செயல்களில் ஈடுபட்டனர்.
குற்றம் சுமத்தப்பட்டவர் கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிவிட்டு, ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பாம்பை வாய்க்குள் விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதை வீடியோவும் எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ வைரல் ஆனதும் மனித உரிமை ஆணையம் கண்டனத்தை வெளிப்படுத்தியது.
1969-ம் ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா பகுதி இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது. நீண்ட வருடங்களாக அங்குள்ள மக்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு அடிக்கடி மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்பொழுது இந்த வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.