Home Latest News Tamil குளிரிலும் அணியலாம், வெயிலிலும் அணியலாம்: ஸ்மார்ட் ஃபேப்ரிக்

குளிரிலும் அணியலாம், வெயிலிலும் அணியலாம்: ஸ்மார்ட் ஃபேப்ரிக்

367
0
குளிரிலும் அணியலாம்

குளிரிலும் அணியலாம், வெயிலிலும் அணியலாம்: ஸ்மார்ட் ஃபேப்ரிக்

குளிர் காலத்தின் இறுதியில் இருந்து கோடைகாலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். நமது சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப நாம் அணியும் உடைகளும் மாறுபடும்.

ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட ஒரு துணி, உடலின் வெளிப்புற வெப்பதிற்கு எதிர்மறையாக செயல்பட்டு உடலின் உட்புற வெப்பத்தை சீராக்குகிறது.

அதாவது வெளிப்புற வெப்பம் துணியின் உட்புறம் சென்று உடலின் வெப்பநிலையை அதிகப் படுத்துவதை தடுக்கும்.

அதேபோல், குளிராக இருக்கும் பொழுது நமது உடலின் வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைத்துக்கொள்ளும் தன்மையும் கொண்டது.

யூனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட்

ஜர்னல் சயின்ஸ் வெளியிட்ட ஆய்வில் இந்த துணியில் இருக்கும் நூலுடன், கடத்தும் திறன் கொண்ட ஒரு உலோக அடுக்கு அல்லது பூச்சு இணைக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தை சீர்படுத்தும் தன்மை கொண்ட ஒரே துணி இதுவாகும். இந்த துணியில் ஃபைபர் என்ற பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு வகையான சிந்தெடிக் மெட்டீரியல் கார்பன் நானோ ட்யூப்ஸ் மற்றும் லேசான கடத்தும் திறன் கொண்ட ஒரு பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் துணி வெப்பத்தை பரிமாற்றம் செய்யவும், தடுக்கவும் செய்யும்.

அதிக வெப்பத்துடன் இருக்கும் சூழ்நிலையில் துணியில் இருக்கும் நூற்கட்டமைப்பு உலோகப்பூச்சை தூண்டுவதால், துணி அகச்சிவப்பு கதிர்களுக்கு (Infrared Radiation) எதிராக செயல்படுகிறது.

துணியானது அகச்சிவப்பு கதிர்களை தடுக்கவும் செய்யவும். அதைவேளை உள்ளே இழுக்கவும் செய்யும். இதனால் வெளிப்புறத்தில் இருக்கும் வெப்பத்திற்கு நேர் எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

பேராசிரியர் மின் ஒயாங்க் கூறியது

மனித உடல் நன்கு வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. வெப்பத்தை குறைக்கவோ இல்லை அதிகரிக்கவோ நாம் ஆடை அணிகிறோம். ஒரு சில நேரம் வெப்பம் தாங்காமல் ஆடை அணிவதில்லை.

ஆனால் இந்த துணி எந்த வெப்பநிலையிலும் உங்கள் உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டது எனக் கூறியுள்ளார்.

Previous articleசப்-கலெக்டரை அசிங்கப்படுத்திய எம்.எல்.ஏ.!
Next articleபாம்பை வைத்து உண்மை அறியும் சோதனை: அத்துமீறிய போலீஸ் விசாரணை
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here