சப்-கலெக்டரை அசிங்கப்படுத்திய எம்.எல்.ஏ.!
கேரளா இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் சப்-கலெக்டராக ரேணு ராஜ் என்ற பெண் பணியாற்றி வருகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கிறார்.
அப்பகுதியில் ராஜேந்திரன் புதிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த கட்டிடம் முறையான அனுமதியின்றி சட்டவிதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.
எனவே சப்-கலெக்டர் ரேணு ராஜ் கட்டிடம் கட்டும் பணிகளை நிறுத்துமாறு எம்.எல்.ஏ.விற்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரேணு ராஜூடன் நடுரோட்டில், பொதுமக்கள் முன்னிலையிலேயே ராஜேந்திரன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது அவர், கட்டிட விதிமுறைகளை வகுக்க அந்தப்பகுதி பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
விதிமுறைகளை பற்றி இவர் தெளிவாகப்படிக்க வேண்டும். மூளை இல்லாதவர்களை சப்-கலெக்டராகப் பணியமர்த்தியுள்ளனர்.
இவ்வாறு பெண் சப்-கலெக்டர் ரேணு ராஜை பொதுமக்கள் முன்னிலையில் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசினார் எம்.எல்.ஏ. ராஜேந்திரன்.
எம்எல்ஏவின் கருத்துக்கு பதிலளித்த ரேணு ராஜ், “நான், எனது கடமையை எனது கடையைத்தான் செய்தேன். தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” எனக் கூறினார்.