அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானை முடக்க சதியா? ஈரான் வளைந்து கொடுக்குமா? பொருளாதார தடை, கடுமையாக எதிர்க்கும் ஈரான்.
பெல்ஜியம்: பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்சல்சில் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ‘நோட்டோ’ பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குள் கொண்டுவருவது குறித்து அவசர கூட்டம் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.
ஒப்பந்தத்தை புறக்கணித்த ஈரான்
மேற்காசிய நாடான ஈரான் வல்லரசு நாடுகளுடன் 2015-ல் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தது.
அதற்கு காரணம் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ராம்பும் அவரது புதிய அணுசக்தி ஒப்பந்தமும் தான்.
அணுசக்தி ஒப்பந்தம்
ஏப்ரல் 2015-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் லூசானேவில் ஈரானுடன் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.
அதில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன் மீதான பொருளாதாரத் தடையை முற்றிலும் விலக்கிக் கொள்ளவேண்டும் என்றது.
இது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மன் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று ஜீன் 30ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது.
யுரேனியத்தை செறிவூட்டி, அணுகுண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கையை 3ல் இருந்து இரண்டாக குறைத்து அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மூன்று புள்ளி ஆறு ஏழு சதவீதமாக குறைக்கும் முடிவு எட்டப்பட்டது.
அதுமட்டுமின்றி அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இறுதி ஒப்பந்தம் சர்வதேச வரவேற்பை பெற்றது.
ட்ரம்பின் புதிய ஒப்பந்தம்
ஈரானுக்கு எதிரான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் திட்டமிட முடிவு செய்தார். புதிய ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்தது.
வெள்ளைமாளிகை
ஏப்ரல் – 25, 2018 வெள்ளைமாளிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மக்ரேனும் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திட்டமிட்டதாகவும், ஈரானின் கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அறிவித்தது.
மேலும் ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத்தடையை விதிக்க இருப்பதாகவும் தெரிவித்தது.
ஈரானின் எதிர்ப்பு
ஈரான் ட்ரம்பின் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை நிராகரித்தது. மீண்டும் பொருளாதாரத்தடையை அமுல் செய்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கையும் செய்தது.
அதன் விளைவை நாமும் கண்முன் பார்க்கிறோம். இருப்பினும் ஐரோப்பிய அமைச்சர்கள், நோட்டோ பொதுச்செயலாளரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.