Home நிகழ்வுகள் இந்தியா தேசிய கீதம் தினம் ஒலிக்கும்; சிலையாய் நிற்கும் கிராம மக்கள்

தேசிய கீதம் தினம் ஒலிக்கும்; சிலையாய் நிற்கும் கிராம மக்கள்

384
0
ஜம்மிகுண்டா

தேசிய கீதம் தினம் ஒலிக்கும்; சிலையாய் நிற்கும் கிராம மக்கள். ஜம்மிகுண்டா கிராம மக்களிடம் எப்படி? இப்படி ஒரு தேசப்பற்று வந்தது?

இயந்திர வாழ்க்கை மனிதன் 

இயந்திர வாழ்க்கையில் நம்முடைய பணிகளை பார்க்கவே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இதற்கிடையே எங்கு நம் தேசப்பற்றை வெளிக்காட்டுவது? தேசிய கீதம் கூட நம்முடைய பள்ளி கல்லூரி பருவத்தோடே பல பேருக்கு மறந்து விட்டது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு கிராமம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் தேசிய கீதத்திற்கென்று சில நொடிகளை ஒதுக்குகின்றனர்.

இதெல்லாம் நடப்பது அயல் நாட்டிலோ அண்டை நாட்டிலோ இல்லை. நாம் வாழுகி்ன்ற இதே இந்திய நாட்டில் தான்.

ஜம்மிகுண்டா கிராமம்

கிராம மக்கள் Jammikunda-Telungana

தெலுங்கானா மாநிலம், கரீம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிகுண்டா என்கின்ற கிராமத்தில் தான் இது நடைபெறுகின்றது.

தினசரி காலை 8 மணிக்கு தேசிய கீதமானது கிராமத்தின் 16 முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் இசைக்கப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் எந்த பணியில் ஈடுபட்டு இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு 52 நொடிகள் எழுந்து நிற்கின்றனர்.

இதில் அவசர மருத்துவ ஊர்திகள் தவிர வாகன ஓட்டிகள் முதல் சாலையில் நடப்பவர்கள், டீக்கடையில் உள்ளவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் வரை அனைவரும் அடக்கம்.

தேசப்பற்று எப்படி வந்தது?தேசப்பற்று இயந்திர வாழ்க்கை

எப்படி இந்த தேசப்பற்று மக்களிடையே வரவேற்பை பெற்றது என்றால் அப்பகுதி காவல் துணை ஆய்வாளரின் தீவிர முயற்சி என்கின்றனர் அக்கிராம மக்கள்.

ஜம்மிகுண்டா காவல் துணை ஆய்வாளர் பிரசாந்த் ரெட்டியின் முயற்சியில் இந்தச் செயலானது ஜம்மிகுண்டா கிராமம் முழுவதும் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரசாந்த் ரெட்டி கருத்து

இது குறித்து பிரசாந்த் ரெட்டி கூறுகையில் “தற்காலத்தில் உள்ள இளைஞர்களிடம் நாட்டுப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே உச்சநீதிமன்றமானது திரையரங்குகளில் படக்காட்சிகள் துவங்கும் முன் தேசியகீதமானது இசைக்க வேண்டும் என்கிற உத்தரவின் அடிப்படையில் தோன்றியதே இந்த எண்ணம் ஆகும்.

இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே கிராமம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. 71 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா முதல் தினசரி, சரியாக காலை 07:58 மணிக்கு தேசிய கீதம் குறித்த அறிவிப்புகள் ஒலிக்கப்படும்.

சரியாக 08:00 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. 52 நொடிகள் வரை தொடரும். பொதுமக்களும் தங்களுடைய ஒத்துழைப்பை தீவிரமாக நல்கி வருகின்றனர்.

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா அன்று மட்டும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதில்லை.

இது போன்று தினமும் நமது தாய்நாட்டிற்காக நற்காரியங்களைச் செய்ய வேண்டும்” என பிரசாந்த் ரெட்டி கூறியுனார்

இது போன்ற நல்லதொரு செயலானது அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் சிறியதாவது தேசபக்தி வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Previous articleஅணுசக்தி ஒப்பந்தம்: ஈரானை முடக்க சதியா?
Next articleபொங்கல் விடுமுறை 9 நாள்; அரசு அறிவிப்பு யாருக்கு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here