தற்கொலைப்படைத் தாக்குதல்: தீவிரவாதத் தலைவனின் துணிச்சல் பேச்சு
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் இன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளான்.
அதில் அவன் பேசியுள்ளதாவது, “இந்த தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்பே. காஷ்மீரை சேர்ந்த இளைஞனே நிகழ்த்தியுள்ளான்.
இது பாகிஸ்தான் எல்லையில் நிகழ்ந்தது அல்ல. இந்தியாவிற்குள் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் எப்படி காரணம் ஆக முடியும்.
காஷ்மீரில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு காஷ்மீர் இளைஞர்களே தண்டனை வழங்கி உள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாக மோடி கூறியது பொய் என நிரூபணம் ஆகிவிட்டது.
பாகிஸ்தான் மீது பழியைப்போட்டு மோடி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். பாகிஸ்தான் இதற்கு அடிபணியக்கூடாது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும்” இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளான்.