அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் திடீரென உள்ளே புகுந்தான்.
அந்த சூப்பர் மார்கெட்டில் மேலாளராக கோவர்தன் ரெட்டி (வயது 48) என்ற இந்தியர் ஒருவர் வேலை செய்து வந்தார்.
உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர் கோவர்தன் ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.
இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் குண்டுகள் கோவர்தன் ரெட்டியின் உடலை துளைத்து எடுத்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம ஆசாமி அங்கிருத்து உடனடியாகத் தப்பிவிட்டான். அமெரிக்கப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த கோவர்தன் ரெட்டி தெலுங்கானா மாநிலம், புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைசெய்து வந்துள்ளார். அவரின் உடலை இந்தியா கொண்டுவர தெலுங்கு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றது.